சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு...! ஜெம் வீரமணி விவகாரம் சமூக வலைதளங்களில் காணொலி வெளியிட ஊடகங்களுக்குத் தடை...! - Seithipunal
Seithipunal


சென்னையில் விசாரணையில் உள்ள ஜெம் வீரமணி வழக்கு தொடர்பான காணொலி காட்சிகளை ஊடகங்களும், சமூக வலைதளங்களும் வெளியிடக்கூடாது என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு குறித்து விவாத நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.சிறுமிகள் தொடர்பான பாலியல் குற்றச்சாட்டில் ஜெம் வீரமணி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு உடந்தையாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்கன் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த வழக்கில் வீரமணியுடன் நீண்டகாலமாக பணியாற்றிய கணேசன் என்பவரின் செல்போனில் இருந்து வழக்கு தொடர்பான காணொலி காட்சிகள் கைப்பற்றப்பட்டதாக விசாரணை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கணேசனும் கைது செய்யப்பட்டுள்ளார்.

வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, பெரம்பூரை சேர்ந்த பிரகாஷ் உள்ளிட்ட சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரகாஷ் வெளிநாட்டில் இருப்பதாக கூறப்படும் நிலையில், அவரை தொடர்பாக விமான நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், வழக்குடன் தொடர்புடையதாக கூறப்படும் பல்வேறு இடங்களில் காவலர்கள் சோதனை நடத்தி, செல்போன்கள், ஆவணங்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். டிஜிட்டல் ஆதாரங்களும் தொழில்நுட்ப வல்லுநர்களின் உதவியுடன் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் குழந்தைகள் நல ஆர்வலர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த புகாருடன் காணொலி அடங்கிய சேமிப்பு சாதனமும், கடிதமும் அளிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதுதொடர்பாக நடைபெற்ற முந்தைய விசாரணையில், காணொலியில் இடம்பெற்ற நபரை அடையாளம் காண முடியவில்லை என காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.இந்த அறிக்கையைத் தொடர்ந்து, வழக்கின் விசாரணையை மேலும் முன்னெடுக்க வேண்டிய அவசியம் குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.

பின்னர் வழக்கு மீண்டும் தீவிரமாக விசாரிக்கப்பட்ட நிலையில், புதிய தகவல்கள் வெளியாகத் தொடங்கின.வழக்கின் விசாரணை விரிவுபடுத்தப்பட்டுள்ள நிலையில், இதனுடன் தொடர்புடையதாக கருதப்படும் பலரிடம் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வழக்கு தொடர்பாக கைப்பற்றப்பட்ட செல்போன்கள் மற்றும் பிற மின்னணு ஆவணங்களில் உள்ள தகவல்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், வழக்கில் தொடர்புடைய காணொலி காட்சிகள் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியானது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது. காணொலிகள் எவ்வாறு வெளியானது, அவை எந்த வழியாகப் பரவின என்பது உள்ளிட்ட விவரங்கள் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமி தொடர்பான காணொலி வெளியிடப்பட்டதாக கூறி, சென்னையை சேர்ந்த துளிர் அறக்கட்டளை சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், போக்சோ சட்ட விதிகளையும், தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளையும் மீறி வழக்கு தொடர்பான காணொலிகள் வெளியிடப்பட்டு வருவதாகவும், அவை எவ்வாறு ஊடகங்களுக்கு கிடைத்தன என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.

காவல்துறை தரப்பில், வழக்கு தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருவதாகவும், 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், இதுவரை 4 சிறுமிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

வழக்கு தொடர்பான காணொலிகள் வெளியான சமூக வலைதளப் பக்கங்களை முடக்கக் கோரி கூகுள் மற்றும் மெட்டா நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கு தொடர்பான காணொலிகளை ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார்.மேலும், இந்த வழக்கு தொடர்பாக விவாத நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என்றும் உத்தரவிட்டார்.

வழக்கின் முன்னேற்றம் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் வாரம் ஒருமுறை பத்திரிகை செய்திக்குறிப்பு வெளியிட வேண்டும் என காவல்துறைக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.மேலும், மனுவுக்கு பதிலளிக்க மத்திய, மாநில அரசுகள், காவல்துறை மற்றும் காணொலிகளை வெளியிட்டதாக கூறப்படும் ஊடக நிறுவனங்களுக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வருகிற 30-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Madras High Court orders action Media banned from publishing videos Gem Veeramani affair on social media


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->