கள்ளக்குறிச்சியில் பெரும் சோகம்...! 'படிக்கச் சொன்னதால்' மனம் உடைந்து தூக்குப்போட்டு உயிரிழந்த 7-ம் வகுப்பு மாணவன்...! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சியில் படிப்பில் கவனம் செலுத்துமாறு தாய் கண்டித்ததைத் தொடர்ந்து, 7-ம் வகுப்பு மாணவன் வீட்டில் தூக்குப்போட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன். இவரது மகன் பிரேம் ஆனந்த் (12).

சின்னசேலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை பிரேம் ஆனந்தை அவரது தாய் சுமதி படிக்குமாறு அறிவுறுத்தி கண்டித்ததாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர் பார்த்திபனும், சுமதியும் தங்களது வயலுக்குச் சென்றுள்ளனர்.

பெற்றோர் வயலுக்குச் சென்றிருந்த நேரத்தில், வீட்டில் தனியாக இருந்த பிரேம் ஆனந்த் மனவேதனையில் தனது அறைக்குச் சென்றுள்ளார். அங்கு தூக்குப்போட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

சிறிது நேரத்துக்குப் பிறகு இதுகுறித்து தெரியவந்ததும், குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அங்கு மாணவனின் உடலை கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவலர்கள், மாணவன் உயிரிழந்ததற்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

great tragedy Kallakurichi 7th grade student hanged himself after being told to study


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->