அது இல்லையென திருமணத்தையே நிறுத்திய பெண்.! உஷாரய்யா உஷாரு 90'ஸ் கிட்ஸ் உஷாரு.!  - Seithipunal
Seithipunal


ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ரீனா சிங் குர்ஜார் என்ற 22 வயது இளம்பெண் கழிவறை இல்லாமல் இருக்கும் கிராமம் ஒன்றில் தனது பெற்றோரால் தனக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை தடுத்த நிறுத்த உதவி கோரி சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.

கழிப்பறை வசதி இல்லாத கிராமத்தில் தனது பெற்றோர் தனக்கு திருமணம் நிச்சயம் செய்திருப்பதாகவும், இந்த கிராமத்தில் திருமணம் செய்து கொள்ள தனக்கு உடன்பாடு இல்லை என்றும் அதில் தெரிவித்துள்ளார். அறிவியல் பட்டதாரியான அந்த இளம்பெண் ரீனா சிங் ஜெய்பூரில் தன்னுடைய குடும்பத்தினருடன் வசித்து வருகின்றார். 

ரீனா சிங்கின் தந்தை காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகின்றார். இந்த நிலையில் ரீனா சிங்கின் அம்மா, சுர்லா கிராமத்திற்கு அவரை அழைத்து அவரின் விருப்பம் இல்லாமல் வலுக்கட்டாயமாக இளைஞர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் செய்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அந்த வீடியோவில் 'எனது விருப்பத்தை கேட்காமல் ஜுலை 1ம் தேதி திருமணம் ஏற்பாடு செய்துவிட்டனர். கழிவறையோ, குளியலறையோ இந்த கிராமத்தில் இல்லை. பெண்களின் பாதுகாப்பிற்கு தேவையான எந்த அம்சமும் இங்கே இருப்பதாக தெரியவில்லை. இங்கே உள்ள பெண்களுக்கு போதிய கல்வியும் வழங்கப்படவில்லை. எனக்கு வேலை கிடைக்கும் வரை திருமணம் செய்யும் யோசனையும் இல்லை. தனது திருமணத்தை தடுத்து நிறுத்த உதவி செய்யுமாறு கோரிக்கை வைத்துள்ள அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். 

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியதை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை செய்து ஜூலை 1ம் தேதி நடக்கவிருந்த திருமணத்தை ரத்து செய்வதாக பெண்ணின் குடும்பத்தினரிடம் எழுதி வாங்கியுள்ளனர். ஏற்கனவே, பலருக்கு திருமணத்திற்கு பெண் கிடைக்காத நிலையில், புதிய சோதனைகளால் 90's கிட்ஸ் அனைவரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

young girl stopped her marriage in rajasthan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->