குழந்தைகளுடன் கால்வாயில் குதித்து தற்கொலை செய்த இளம்பெண் - உ.பியில் சோகம்.!!
women sucide with childrens in uttar pradesh
உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பண்டா மாவட்டம் ரைசுரா கிராமத்தை சேர்ந்தவர்கள் அகிலேஷ் - ரீனா தம்பதியினர். இவர்களுக்கு ஹிமன்ஷு, அன்ஷி, பிரின்ஸ் என்று மூன்று பிள்ளைகள் இருந்தனர்.
இந்த நிலையில், அகிலேசுக்கும் அவரது மனைவி ரீனாவுக்கும் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இதனால் மிகுந்த மன உளைச்சல் அடைந்த ரீனா வெள்ளிக்கிழமை இரவு மூன்று குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி அருகிலுள்ள கால்வாயில் தனது குழந்தைகளுடன் குதித்தார்.
மறுநாள் காலை மனைவி, குழந்தைகள் வீட்டில் இல்லாததையறிந்த அகிலேஷ் உடனடியாக உறவினர்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் விரைந்து வந்து அப்பகுதியில் தீவிரமாகத் தேடிய நிலையில் கால்வாய் அருகே ரீனாவின் வளையல், செருப்பு உள்ளிட்ட உடைமைகள் இருப்பதை கண்டுப்பிடித்தனர்.
இதையடுத்து விரைந்து வந்த போலீசார் சுமார் நான்கு மணிநேரம் தீவிர தேடுதல் நடத்தி ரீனா மற்றும் மூன்று குழந்தைகளின் உடல்களை சடலமாக மீட்டனர். அந்த உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
women sucide with childrens in uttar pradesh