திருமணமான காதலியை பார்க்க வந்த காதலன் - கணவன் செய்த அதிர்ச்சி செயல்.! - Seithipunal
Seithipunal


திருமணமான காதலியை பார்க்க வந்த காதலன் - கணவன் செய்த அதிர்ச்சி செயல்.!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள தியோரியா மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியினருக்கு திருமணமாகி ஒரு ஆண்டு ஆகியுள்ளது. ஆனால், அந்தப் பெண்ணுக்கு ஆகாஷ் ஷா என்ற நபருடன் திருமணத்தை மீறிய தொடர்பு இருந்துள்ளது.

இந்த நிலையில் அந்த நபர் இரவு நேரத்தில் அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்றுள்ளார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அந்த இளைஞரை கையும் களவுமாக பிடித்து விசாரணை nadathinar.

அதில், அந்த நபர் பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் என்பதும், இரண்டு ஆண்டுகளாக அந்த பெண்ணை காதலித்து வந்தும் தெரிய வந்தது.
இந்நிலையில், அந்த பெண், தன் கணவரிடம் தன்னுடைய காதலருடன் போக சம்மதிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். 

இதையடுத்து அந்தப் பெண்ணின் கணவர், அவர்கள் இருவரையும் கோவிலுக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து வைத்து, காதலர் வந்த இருசக்கரவாகனத்திலேயே அனுப்பி வைத்தார். திருமணமான ஓராண்டுக்கு பிறகு மனைவியை கணவர் காதலருடன் சேர்த்து வைத்த நிகழ்வு அந்த பகுதியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

woman married boy friend one year after marriage in uttar pradesh


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->