ஆஸ்கர் விருதை வெல்லுமா 'நாட்டு நாட்டு' பாடல்?.. ஆவலுடன் இந்திய ரசிகர்கள்...!! - Seithipunal
Seithipunal


பிரபல இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் கடந்த வருடம் மார்ச் 25-ஆம் தேதி வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.1200 கோடியை வசூலித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இப்படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியாபட், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர். 

இந்த படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைத்திருந்தார். இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் நாமினேஷனில் தேர்வானது.

இந்நிலையில் 95வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இந்திய நேரப்படி இன்று காலை 5.30 மணிக்கு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சிறந்த பாடல் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ள ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் விருதை வெல்லுமா? என இந்திய ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

மேலும் 'நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் விருது வென்றால் இந்தியாவில் ஆஸ்கர் வென்ற முதல் தென்னிந்திய பட பாடல் என்ற பெருமையை அப்பாடல் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Will the song Nattu Nattu win the Oscar award


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->