கணவரைப் பழிவாங்க நண்பர்களுடன் சேர்ந்து திட்டம் தீட்டிய மனைவி கைது! - Seithipunal
Seithipunal


கர்நாடகத்தில் கணவரை பழிவாங்குவதற்காக காவல்துறைக்கு வெடிகுண்டு மிரட்டல் செய்தியை அனுப்பிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். 

இது தொடர்பாக போலீசார் தெரிவித்திருப்பதாவது, 32 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஆன்லைனில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்ததை கணவர் தட்டி கேட்டுள்ளார். 

இருப்பினும் மனைவி அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து ஆண் நண்பர்களுடன் உரையாடி வந்ததால் ஆத்திரமடைந்த கணவன் மனைவியின் செல்போனை உடைத்துள்ளார். 

இதனால் கோபமடைந்த பெண், ஆண் நண்பரிடம் தெரிவித்து கணவரை சிக்க வைப்பதற்காக திட்டமிட்டுள்ளனர். ஆண் நண்பர் ஒருவர் பெண்ணிடம் வெடிகுண்டு மிரட்டல் குறித்து புரளி செய்தியை அனுப்பியுள்ளார். 

இதனை கணவரின் தொலைபேசியில் இருந்து மூத்த காவல்துறை அதிகாரிக்கு அனுப்ப பரிந்துரைத்துள்ளார். அதன்படி அந்தப் பெண் தனது கணவரின் தொலைபேசியில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் செய்தியை காவல்துறைக்கு அனுப்பியுள்ளார். 

அதன் பிறகு கணவரின் மொபைலில் இருந்து அதனை நீக்கியுள்ளார். இதனை அடுத்து பெண்ணின் கணவரை போலீசார் காவலில் வைத்து விசாரணை நடத்தி சந்தேகமடைந்து அவரது மனைவியிடமும் விசாரணை நடத்தினர். 

பின்னர் தனது கணவரை பழி வாங்குவதற்காக இந்த புரளி செய்தியை அனுப்பியதாக அவரது மனைவி ஒப்புக்கொண்டார். பின்னர் மிரட்டல் செய்தி அனுப்பிய பெண் மற்றும் அவரது நண்பர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

wife threatened police department with bomb avenge her husband


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->