ஒத்துழைப்பை நாங்கள் தொடர்ந்து விரிவுபடுத்துவோம்..ரஷிய அதிபர் புதின் சுதந்திர தின வாழ்த்து!
We will continue to expand cooperation Russian President Putins Independence Day greetings
பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பிற துறைகளில் இந்தியா பரவலாக வெற்றி பெற்றுள்ளது என்று ரஷிய அதிபர் புதின் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதிய பாரதம்’’ என்ற கருப்பொருளில் சுதந்திர தின விழா காலை 7.30 மணிக்கு தொடங்கியது, விழாவுக்கு காலையில் பிரதமர் வருகை தந்த போது நாட்டின் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், இணை மந்திரி சஞ்சய் சேட், செயலாளர் ராஜேஷ் குமார் சிங் ஆகியோர் அவரை வரவேற்றார்கள்.
தொடர்ந்து பிரதமரை காவலர் மரியாதை பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு அணிவகுப்பு மரியாதையை பிரதமர் ஏற்றுக் கொண்டார்.ஒட்டுமொத்த அணிவகுப்புக்கு இந்திய விமானப்படை தலைமை தாங்கியது.
அணிவகுப்பு மரியாதையை தொடர்ந்து பிரதமர் மோடி செங்கோட்டையின் கொத்தளம் பகுதிக்கு சென்ற பிரதமர் மோடி 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க தேசியக்கொடியை ஏற்றினார். கொடியேற்றத்தை தொடர்ந்து 2 ஹெலிகாப்டர்களில் அங்கு மலர் தூவப்பட்டது. இந்த ஹெலிகாப்டர்களில் ஒன்றில் தேசியக் கொடியும், மற்றொன்றில் ஆபரேஷன் சிந்தூரை சித்தரிக்கும் கொடியும் பொருத்தப்பட்டிருந்தது.கொடியேற்றத்தை தொடர்ந்து பிரமாண்ட இசையுடன் கொடி வணக்கம் செலுத்தப்பட்டது.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இந்திய மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பிரான்ஸ் வரும் பிரதமர் மோடியை அன்புடன் வரவேற்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் ரஷிய அதிபர் புதின், ஜனாதிபதி மற்றும் பிரதருக்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.
அதில், "பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பிற துறைகளில் இந்தியா பரவலாக வெற்றி பெற்றுள்ளது.
உங்கள் நாடு உலக அரங்கில் தகுதியான மரியாதையைப் பெற்றுள்ளது மற்றும் சர்வதேச பிரச்சினைகளைத் தீர்ப்பதில் தீவிரமாக பங்களிக்கிறது.இந்தியாவுடனான எங்கள் சிறப்பு மூலோபாய கூட்டாண்மையை நாங்கள் மிகவும் மதிக்கிறோம். எங்கள் கூட்டு முயற்சிகள் மூலம், பல பகுதிகளில் ஆக்கபூர்வமான இருதரப்பு ஒத்துழைப்பை நாங்கள் தொடர்ந்து விரிவுபடுத்துவோம் என்று நான் நம்புகிறேன்.
பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்பு, உறுதித்தன்மையை வலுப்படுத்துவதை இருநாடுகளும் ஆதரிக்கிறது" என்று கூறப்பட்டுள்ளது.
English Summary
We will continue to expand cooperation Russian President Putins Independence Day greetings