பிரபல செய்தி தொலைக்காட்சி நிறுவனர் வைகுண்டராஜனுக்கு சிறைத்தண்டனை! டெல்லி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!  - Seithipunal
Seithipunal


மத்திய அரசின் சுற்றுச்சூழல் அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில், பிரபல தொழிலதிபரான விவி மினரல்ஸ் மற்றும் விவி குரூப்ஸ் தலைவர் வைகுண்டராஜனுக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று சிறைத்தண்டனை வழங்கி அதிரடியாக தீர்ப்பு வழங்கி உள்ளது. 

கடந்த 2012ம் ஆண்டு, திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் பகுதியில் உள்ள சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் சுற்றுச்சூழல் துறையின் ஒப்புதல் வழங்குவதற்காக, விவி மினரல்ஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் தாதுமணல் ஏற்றுமதி தொழில் செய்த வைகுண்டராஜன் மீது, மத்திய சுற்றுச் சூழல் அதிகாரி நீரஜ் கட்டரிக்கு லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது. 

 

இதுதொடர்பான வழக்கில், லஞ்சம் வாங்கியதாக சொல்லப்பட்ட மத்திய அரசு அதிகாரி நீரஜ் கட்ரி, லஞ்சம் கொடுத்ததாக சொல்லப்பட்ட வைகுண்டராஜன் மற்றும்  லஞ்சம் கொடுக்க உதவியதாக சொல்லப்பட்ட விவி மினரல்ஸ் ஊழியர் சுப்புலட்சுமியும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டனர். வழக்கு கடந்த 2019ம் ஆண்டு சிபிஐ-யால் வழக்கு பதிவு செய்யப்பட்டு, டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. 

வழக்கின் விசாரணை கடந்த  ஜனவரி 19 ந்தேதி முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, பிப்ரவரி 1ந்தேதி அன்று  முதல் குற்றவாளியாக நீரஜ் கட்ரியும், இரண்டாவது குற்றவாளியாக வைகுண்டராஜனும், மூன்றாவது குற்றவாளியாக லஞ்சம் கொடுக்க உதவிய விவி மினரல்ஸ் ஊழியர் சுப்புலட்சுமியும், நான்காவது குற்றவாளியாக வி.வி. மினரல்ஸ் நிறுவனம் என தீர்ப்பில் அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, தண்டனை விவரம் பிப்ரவரி 22ந்தேதி (இன்று) வழங்கப்படும் என நீதிபதி தெரிவித்திருந்தார். அதனப்டி இன்று தண்டனை விபரங்கள் அறிவிக்கப்பட்டது. 

முதல் குற்றவாளியான அரசு அதிகாரி நீரஜ் கட்ரிக்கு  5 ஆண்டுகள் சிறையும், ரூ. 5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் குற்றவாளியான வி.வி. மினரல்ஸ்  வைகுண்ட ராஜனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும்,  5 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது குற்றவாளியான லஞ்சம் கொடுக்க உதவியதாக விவி மினரல்ஸ் ஊழியர்  சுப்புலட்சுமிக்கு  3 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ரூ. 2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நான்காவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட வி.வி. மினரல்ஸ் நிறுவனத்துக்கு ரூ. 10 லட்சம் அபராதமும் விதித்தது  தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

வைகுண்டராஜன் அரசியல் வட்டாரத்தில் செல்வாக்கு மிகுந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு சொந்தமாக பிரபலமான செய்தி தொலைக்காட்சி சேனலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VV Minerals Vaikundarajan convict in bribe case


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->