ரூ.95,000 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு; 'விபி ஜி ராம் ஜி' திட்டம் ஜூலை 1 முதல் அமல்; அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அறிவிப்பு..!
VP G Ram G Scheme to be Implemented from July
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்துக்கு மாற்றாக 125 நாட்களாக கொண்டு வரப்பட்ட விபி ஜி ராம் ஜி திட்டம் வரும் ஜூலை 01-ஆம் தேதி முதல் இந்த புதிய விபி ஜிராம் ஜி திட்டம் ஜூலை 1-ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் அமலுக்கு வரும் என்றும், தற்போதுள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் (MGNREGA) விதிமுறைகளை படிப்படியாக மாற்றியமைக்கும் என்றும் மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் அறிவித்துள்ளது.
இது குறித்து போபாலில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மேலும் கூறியதாவது;
கிராமபுற மக்களின் வாழ்வாதாரத்துக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதன் மூலமும், கிராமப்புற உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதன் மூலமும், கிராமப்புறத் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் கிராமங்களுக்கு இந்த திட்டம் ஒரு புதிய விடியலை கொண்டுவரும் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த புதிய திட்டமானது கிராமப்புறக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 125 நாட்கள் வேலை வாய்ப்புக்கான உத்தரவாதம் அளிக்கும் என்று குறிப்பிட்டுள்ளதோடு, இச்சட்டம் முழுமையாக அமலாகும் வரை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தின் அனைத்து தற்போதைய விதிகளும் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், புதிய சட்டம் அமலாகும் வரையிலான காலத்தில் அனைவருக்கும் வேலை வாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்வதே அரசாங்கத்தின் முன்னுரிமையாகும் என்று சிவராஜ் சிங் சவுகான் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இச்சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிகள் மாநிலங்களுடன் கலந்தாலோசித்த பிறகு இறுதி செய்யப்பட்டு வருகிறதாகவும், புதிய சட்டத்தின் கீழ் செயல்பாட்டுத் தயார் நிலையை நிறைவு செய்ய மாநிலங்களுக்கு ஆறு மாதங்கள் வரை அவகாசம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

அத்துடன், சில மாநிலங்கள் தங்கள் ஏற்பாடுகளை இன்னும் நிறைவு செய்யாதிருந்தாலும் கூட, ஜூலை 01ந் தேதி முதல், கிராமப்புற வேலைவாய்ப்புப் பணிகளுக்கான நிதி விபி ஜி ராம் ஜி சட்டத்தின் மூலமாகவே வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மத்திய பட்ஜெட்டில் இத்திட்டதுக்காக மத்திய அரசு ரூ.95,000 கோடிக்கும் அதிகமாக நிதி ஒதுக்கியுள்ளதாகவும், அதேவேளையில் மாநிலங்களும் தனித்தனியாக பட்ஜெட் ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், இத்திட்டத்தின் கீழ் ஏற்படும் மொத்த ஆண்டுச் செலவு ரூ.1.51 லட்சம் கோடிகளை தாண்டும் எனவும் மத்திய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
English Summary
VP G Ram G Scheme to be Implemented from July