ஒடிசா ரயில் விபத்து || பெற்றோர் இழந்த குழந்தைகளுக்கு உறைவிட இலவச கல்வி.. வீரேந்திர சேவாக் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் ஹவுராவிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், பெங்களூர்லிருந்து ஹவுரா நோக்கி சென்ற ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சரக்கு ரயில் ஆகியவை மோதி விபத்துக்குள்ளானதில் 275 பேர் தற்போது வரை பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோர விபத்திற்கு கோளாறு தான் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் ரயில் விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்பதாக அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி அறிவித்திருந்த நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு தங்குமிடம் உட்பட முழு கல்வியையும் தனது சேவாக் இன்டர்நேஷனல் பள்ளியில் இலவசமாக வழங்க முன்வந்துள்ளார்.

இது தொடர்பாக ஒடிசா ரயில் விபத்து குறித்தான படத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் "இந்த படம் நீண்ட காலமாக நம்மை ஆட்டிப்படைக்கும். இந்த துயரமான நேரத்தில், இந்த துயரமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குழந்தைகளின் கல்வியை கவனித்துக்கொள்வதுதான் என்னால் செய்யக்கூடியது. அத்தகைய குழந்தைகளுக்கு சேவாக் இன்டர்நேஷனல் பள்ளியின் உறைவிட வசதியில் இலவசக் கல்வியை வழங்குகிறேன். மேலும் மீட்பு பணிகளில் முன்னணியில் இருந்த அனைத்து துணிச்சலான ஆண்களுக்கும் பெண்களுக்கும் மற்றும் தன்னார்வமாக இரத்த தானம் செய்யும் மருத்துவ குழு மற்றும் தன்னார்வலர்களுக்கும் வணக்கம். இதில் நாங்கள் ஒன்றாக இருக்கிறோம்" என பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Virendra Sehwag announced free boarding education for children who lost parents


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->