உ.பி., நீதிமன்ற வளாகத்தில் பிரபல ரவுடி துப்பாக்கியால் சுட்டு கொலை! வழக்கறிஞர் வேடத்தில் வந்த மர்ம நபர்!
Uttar Pradesh luknow Court gun fire
உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோ நீதிமன்ற வளாகத்தில் பிரபல ரவுடி சஞ்சீவ் ஜீவா துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரவுடியை சுடுவதற்காக வந்த குற்றவாளி வழக்கறிஞர் போல் வேடமிட்டு வந்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இதனால் நிலைகுலைந்த ரவுடி சஞ்சீவ் ஜீவா ரத்த வெள்ளத்தில் கீழே விழந்தார்.
அப்போது நீதிமன்ற வளாகத்தில் இருந்த நபர்கள் அந்த காட்சியை செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். அருகில் இருந்த காவல்துறையினர் அவரின் ரத்தத்தை நிறுத்த முயற்ச்சி செய்துகொண்டிருந்த போதே சஞ்சீவ் ஜீவா உயிரிழந்தார்.

மேற்கு உத்தர பிரதேசத்தில் பிரபலமன ரவுடியான சஞ்சீவ் ஜீவாவின் தலைமையில் ஒரு ரவுடி கும்பல் செயல்பட்டு வருகிறது. சஞ்சீவ் ஜீவா பாஜக பிரமுகர் பிரம்மதத்தா திவேதி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் காவல் அதிகாரிகளும் காயமடைந்தனர். அவர்கள் சிவில் கோர்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நீதிமன்ற வளாகத்திற்குள் வழக்கறிஞர் போல வேடமட்டு வந்து ரவுடியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Uttar Pradesh luknow Court gun fire