புவிசார் குறியீடு என்றால் என்ன? அதனால் என்ன பயன்?
uses of geographic Code
இந்தியாவின் உள்ள ஒவ்வொறு மாநிலத்திலும் அங்குள்ள நிலத்தின் மற்றும் நீரின் தன்மை, தட்பவெட்ப நிலை ஆகியற்றை பொறுத்து அங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் தரம் அதற்கேற்ப மாறுபடுகிறது. எனவே பாரம்பரியமாக பல நூறு ஆண்டுகளுக்கு மேல ஒரு குறிப்பிட்ட பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள், உணவு வகைகள், விவசாயம் சார்ந்த இடு பொருட்கள் என பாரம்பரியமாக உருவாக்கப்பட்டு வரும் பொருட்களை உலக நாடுகள் அனைத்தும் அறிந்துகொள்ளும் வகையில் ஏற்றுமதி செய்வதற்கு அங்கீகாரம் அளித்து புவிசார் குறியீடு இந்திய அரசால் வழங்கப்படுகிறது.
புவிசார் குறியீட்டை மத்திய வர்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அறிவு சார் சொத்துரிமை துறை, புவிசார் குறியீடு என்ற அங்கீகாரத்தை 2003 ஆம் ஆண்டு முதல் வழங்கி வருகிறது.