முஸ்லிம் வாக்குகளுக்காக உருது மொழியில் பிரசாரம்: பாஜக-வின் சந்தர்ப்பவாத அரசியல்...!
Urdu Primary School BJP condemn mumbai
மும்பை மாநகராட்சித் தேர்தல் நெருங்கும் நிலையில், இஸ்லாமியர்களின் உருது மொழிக்கு எதிராகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டப்படும் பா.ஜ.க., தனது வேட்பாளர்கள் மூலம் உருது மொழியில் பிரசாரம் செய்து வருவது குறித்துக் கடும் சர்ச்சை எழுந்துள்ளது.
குற்றச்சாட்டுகளின் பின்னணி:
சமீபத்தில், மும்பை மாநகராட்சி, பைகுல்லாவில் உள்ள ஒரு உருது கற்பித்தல் மையத்தை இடித்தபோது, பா.ஜ.க.வின் எதிர்ப்புகளுக்கு மத்தியில்தான் மாநகராட்சி இந்த நடவடிக்கையை எடுத்தது.
இந்நிலையில், தேர்தலில் உருது பேசும் முஸ்லிம் சமூகத்தினரின் வாக்குகளைக் கவரும் நோக்குடன், பா.ஜ.க. பெண் வேட்பாளர் ஒருவர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை உருது மொழியில் அச்சிட்டு பிரசாரம் செய்துள்ளார். அவரது படமும் உள்ளூர் தலைவர்களின் படங்களும் இந்த நோட்டீஸ்களில் அச்சிடப்பட்டுள்ளன.
கண்டனம் தெரிவித்த கட்சிகள்:
பா.ஜ.க.வின் இந்தச் செயலுக்குக் காங்கிரஸ், ஓவைசியின் ஏஐஎம்ஐஎம், மற்றும் ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (எம்.என்.எஸ்.) உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
எம்.என்.எஸ். கண்டனம்: "இதுதான் பா.ஜ.க.வின் தீவிர இந்துத்துவா அரசியலா? ஒருபுறம் முஸ்லிம்களை அவமதித்து இந்துக்களை அவர்களுக்கு எதிராகத் திருப்புகிறார்கள்; மறுபுறம் முஸ்லிம் வாக்குகளைக் கவர உருது மொழியில் சுவரொட்டிகளை வெளியிட்டுள்ளனர்," என்று விமர்சித்துள்ளது.
ஏஐஎம்ஐஎம் விமர்சனம்: "நேற்று வரை உருது மொழியை வெறுத்தது பா.ஜ.க. ஆனால் இன்று முஸ்லிம் வாக்குகளுக்காக அவர்களே உருது சுவரொட்டிகளை வெளியிட்டுள்ளனர். வாக்குகளைப் பெற அவர்கள் எதையும் செய்வார்கள்," என்று சாடியுள்ளது.
English Summary
Urdu Primary School BJP condemn mumbai