பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில் உரையாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன் - அமித்ஷா.! - Seithipunal
Seithipunal


தேசிய புலனாய்வு அமைப்பு சார்பில் பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு-2024 இன்று நடைபெற உள்ளது. இரண்டு நாள் நடைபெறும் இந்த மாநாட்டில் எதிர்கால பயங்கரவாத எதிர்ப்பு கொள்கைகள், இந்தியாவுக்கு வெளியே செயல்படும் பயங்கரவாத குழுக்களை சர்வதேச அரசுகளின் உதவியுடன் எதிர்கொள்வது உள்ளிட்டவைக் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், பயங்கரவாதம் இல்லாத இந்தியாவை உருவாக்குவதில் மோடி அரசு உறுதியாக உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- 

"பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையுடன், பயங்கரவாதம் இல்லாத இந்தியாவை உருவாக்குவதில் மோடி அரசு உறுதியாக உள்ளது. இன்று தொடங்கும் இரண்டு நாள் பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு, பாரதத்தின் பாதுகாப்பு கோட்டையை வலுப்படுத்தும் அமைப்புகளிடையே ஒருங்கிணைப்பை மேலும் மேம்படுத்தும். மாநாட்டில் உரையாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

union minister amithsha tweet waiting for Anti Terrorism Conference meeting


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->