ஐநா பாதுகாப்பு கவுன்சில் பயங்கரவாத எதிர்ப்புக் குழு கூட்டம்.! முதல் முறையாக இந்தியாவில் இன்று தொடக்கம்.! - Seithipunal
Seithipunal


ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத எதிர்ப்பு குழுவின் சிறப்பு கூட்டம் இன்றும், நாளையும் மும்பை மற்றும் டெல்லியில் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் 'பயங்கரவாத நோக்கங்களுக்காக புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதை எதிர்த்தல்' என்ற கருப்பொருளை பற்றி விவாதிக்க உள்ளது. ஐ.நா. பயங்கரவாத எதிர்ப்பு அலுவலகத்தின் துணைப் பொதுச்செயலாளர் விளாடிமிர் வோரோன்கோவ் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது.

மேலும் கிரிப்டோ-கரன்சி மூலம் பயங்கரவாத நிதியுதவி மற்றும் புதிய கால பயங்கரவாதத்தில் ட்ரோன்களைப் பயன்படுத்துவது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்க உள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பயங்கரவாத எதிர்ப்புக் குழுவின் சிறப்புக் கூட்டத்தை இந்தியா முதன்முறையாக நடத்தவுள்ளது. இதில் மும்பையில் நடைபெறும் அமர்வுகளின் போது, பயங்கரவாதத்தால் ​​பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது.

மேலும் பிரிட்டிஷ் வெளியுறவு மந்திரி ஜேம்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அல்பேனியா வெளியுறவு அமைச்சர்கள் உட்பட பலர் இந்த கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

UN Security Council Counter Terrorism Committee meeting starts first time in india


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->