பராமரிப்பு பணி : இன்று நாடு முழுவதும் 259 ரெயில்கள் ரத்து.!
two hundard and fifty nine trains close for renovation work
இந்தியாவில் சில காலமாக நிலவி வரும் அடர்பனியால் வாகனங்கள், ரெயில்கள் மற்றும் விமான போக்குவரத்து உள்ளிட்டவற்றின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், இன்று டெல்லி விமான நிலையத்தில் இருந்து இருபது விமானங்கள் காலதாமதத்துடன் இயக்கப்படுகின்றன.
இதே போல் ரெயில் போக்குவரத்தும் பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில், ரெயில்வே நிர்வாகம் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "நாடு முழுவதும் இன்று 259 ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. இந்த நடவடிக்கை ரெயில்வே தண்டவாளங்களில் பராமரிப்பு மற்றும் இயக்க பணிகளுக்காக எடுக்கப்பட்டுள்ளது.

இதைத் தவிர, வடக்கு ரெயில்வே மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் தெளிவற்ற வானிலை உள்ளிட்ட காரணங்களுக்காகவும் ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. இதைத் தொடர்ந்து 42 ரெயில்கள் சென்று சேரும் இடங்கள் மாற்றம் செய்யப்பட்டு ரெயில்களின் பயண தொலைவு குறைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 34 ரெயில்களின் பயண நேரம் மாற்றியமைக்கப்பட்டும், 20 ரெயில்களின் போக்குவரத்து திசைமாற்றி விடப்பட்டும் உள்ளது. இதனால், கோரக்பூர், லக்னோ, கோட்டயம், கொல்கத்தா, சூரத், உதய்ப்பூர், ஷாலிமர், அமராவதி, பதன்கோட், பல்வால் உள்ளிட்ட பல நகரங்கள் பாதிக்கப்பட கூடும்.
மேலும், ரெயில் பயணிகளும் இந்திய ரெயில்வேக்கான என்.டி.இ.எஸ். எனப்படும் வலைதளத்தில் சென்று ரெயில்களின் நிலை குறித்து அறிந்து கொள்ள ரெயில்வே நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையினால், பயணிகளின் முன்பதிவு உடனடியாக ரத்து செய்யப்பட்டு, பயனாளர்களின் கணக்குகளுக்கு பணம் விரைவில் திருப்பி செலுத்தப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
English Summary
two hundard and fifty nine trains close for renovation work