தன்னை பாப்பரசராக சித்தரித்த AI படத்தை பகிர்ந்த ட்ரம்ப்: கத்தோலிக்கர்கள் கடும் விமர்சனம்..! - Seithipunal
Seithipunal


அமெரிக்க ஜனாதிபதியாக 02 வது முறையாக பதவியேற்றதை தொடர்ந்து, டொனால்ட் ட்ரம்ப் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அத்துடன் உலக நாடுகளுக்கு தனது அரசின் வரி விதிப்பு காரணமாக உலக பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கங்கள் நடக்கின்றன. இதனால் அதிக விமர்சனங்களையும் பெற்று வருகிறார்.

இந்நிலையில், தன்னை பாப்பரசர் என்று சித்தரிக்கும் AI யால் உருவாக்கப்பட்ட படத்தைப் டொனால்ட் ட்ரம்ப் பகிர்ந்துள்ளார். இதன் காரணமாக கத்தோலிக்கர்களின் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார். வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்குகளில், இந்த படம் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஏப்ரல் 21 அன்று  பாப்பரசர் பிரான்சிஸ் காலமானார். அதனை தொடர்ந்து அவரின் மறைவுக்கு உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்கர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

தற்போது வாடிகன் புதிய பாப்பரசரை தேர்ந்தெடுக்கத் தயாராகி வருகிறது. இந் நிலையில் இந்த A I படம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு நியூயோர்க் மாநில கத்தோலிக்க மாநாடு இந்தப் பதிவைக் கண்டித்துள்ளது. அத்துடன், ட்ரம்ப் விசுவாசத்தை அவமதித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது. "நான் போப்பாக இருக்க விரும்புகிறேன்" என்று ட்ரம்ப் சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் கூறியதைத் தொடர்ந்தே இந்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Trump shares AI image depicting him as Pope Catholics strongly criticize him


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->