ஜார்க்கண்டில் நெகிழ்ச்சி சம்பவம்: தண்டவாளம் அருகே குட்டி ஈன்ற யானை; 02 மணி நேரம் ரயில் சேவையை நிறுத்தம்: குவியும் பாராட்டு..!
Train services suspended for 2 hours due to elephant giving birth near Jharkhand tracks
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலக்கரி சுரங்கங்கள் அதிகம் உள்ளன. அங்கிருந்து வெளி மாநிலங்களுக்கு நிலக்கரி எடுத்து செல்லும் ரயில்களுக்காக பார்ககானா மற்றும் ஹசாரிபாக் இடையே அடர்ந்த வனப்பகுதியில் ரயில் தண்டவாளம் அமைக்கப்பட்டுள்ளது. குறித்த வழித்தடத்தில் வனவிலங்குகள் அடிக்கடி சுற்றி திரியும்.
இந்நிலையில், குறித்த தண்டவாளம் அருகே யானை குட்டி ஈன்றதை வனத்துறை அதிகாரி பார்த்துள்ளார். இதனால் அவர் ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனால், 02 மணி நேரம் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதையறிந்து, பலரும் வனத்துறை மற்றும் ரயில்வே அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
-s35dm.png)
அதாவது சினையாக இருந்த யானை வலியுடன் தண்டவாளத்தில் இருந்து குட்டி ஈன்றது. அதன் பிறகு தாயும், சேயும் பத்திரமாக ரயில் தண்டவாளத்தில் இருந்து சென்றபிறகே ரயில் இயக்க அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில், யானையின் பிரசவத்திற்காக ரயில் சேவையை இரண்டு மணி நேரம் நிறுத்தி வைத்த ரயில்வே அதிகாரிகளுக்கு பாராட்டு குவிந்து வருகிறது. தாயும், குட்டி யானையும் தண்டவாளத்தில் இருந்து செல்லும் வீடியோவை பகிர்ந்து சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
English Summary
Train services suspended for 2 hours due to elephant giving birth near Jharkhand tracks