ஆந்திராவில் கொடூரமாக கொல்லப்பட்ட தக்காளி வியாபாரி - நடந்தது என்ன?
tomatto seller kill in andira
ஆந்திராவில் கொடூரமாக கொல்லப்பட்ட தக்காளி வியாபாரி - நடந்தது என்ன?
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தக்காளியின் விலை தாறுமாறாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை உயர்வு வரத்துக் குறைவில் ஏற்பட்டது ஆகும். இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்த நிலையில், ஆந்திரா மாநிலத்தில் உள்ள, அன்னமய்யா மாவட்டம் மதனப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர் ரெட்டி என்பவர், தனது தோட்டத்திலேயே தங்கியிருந்து தக்காளி பயிரிட்டு அறுவடை செய்துள்ளார். அதன் மூலம் அவர் 20 நாட்களில் 30 லட்சம் ரூபாய் வரை லாபம் ஈட்டியுள்ளார்.
இதற்கிடையே, ராஜசேகர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் தக்காளித் தோட்டத்தில் சடலமாக கிடந்துள்ளார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்தத் தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ராஜசேகர் ரெட்டியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தியதில், "தக்காளி விற்பனை மூலம் ராஜசேகர் ரெட்டி சம்பாதித்து வைத்திருந்த பணத்தை கொள்ளை அடிக்கவே அவர் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் கொலையாளிகள் இருசக்கர வாகனத்தில் வந்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து போலீசார் கொலையாளிகளை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் தக்காளி விவசாயி கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
tomatto seller kill in andira