50 வயதில் திருமணம் செய்த மம்தா கட்சி எம்பி மஹுவா மொய்த்ரா! - Seithipunal
Seithipunal


மேற்கு வங்கம்: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கிருஷ்ணா நகர் தொகுதியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் மஹுவா மொய்த்ரா, 50 வயதாகும் இவர், பிஜு ஜனதா தளத்தின் மூத்த தலைவர் மற்றும் வழக்கறிஞர் பினாகி மிஸ்ராவை (65) ஜெர்மனியில் திருமணம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக இருவரும் எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடாத நிலையில், இத்தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

முன்னதாக மஹுவா, டென்மார்க்கை சேர்ந்த லார்ஸ் பிரோர்சன் என்பவரை திருமணம் செய்திருந்ததாக கூறப்படுகிறது.

தற்போது பரவும் திருமணத் தகவலைத் திரிணாமுல் மற்றும் பிஜு ஜனதா தள கட்சி தரப்பில் யாரும் உறுதிப்படுத்தவில்லை.

பினாகி மிஸ்ரா, உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக செயல்பட்டு வருவதுடன், புரி மக்களவைத் தொகுதியிலிருந்து நான்கு முறை எம்.பி.யாக தேர்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TMC Mahua Moitra marriage


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->