மக்கள் நலத் திட்டப்பணிகளை விரைந்து முடிங்கள்..அதிகாரிகளுக்கு MLA அனிபால் கென்னடி வலியுறுத்தல்!   - Seithipunal
Seithipunal


புதுச்சேரி  உப்பளம் தொகுதியில் துவங்கப்பட்ட மக்கள் நலத் திட்டப்பணிகள் நிறைவு பெறாமல் இருப்பதைக்  குறித்து நகராட்சி அதிகாரிகளுடன் சட்டமன்ற உறுப்பினர்  அனிபால் கென்னடி அவர்கள் நேரில் சந்தித்து உடனடியாக பணிகளை முடித்துத் தருமாறு கேட்டுக் கொண்டார்.. 

உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நலத்திட்டப் பணிகள் துவங்கப்பட்ட நிலையில் அப்பணிகள்  முழுமைப் பெறாமல் இருப்பதை நகராட்சி அதிகாரி துணை செயற்பொறியாளர் யுவராஜ் இளநிலைப்பொறியாளர் சண்முக சுந்தரம் அவர்களை நேரில் சென்று சந்தித்த சட்டமன்ற உறுப்பினர்  அனிபால் கென்னடி அவர்கள்.

தொகுதி முழுவதும் தொடங்கப்பட்ட மக்கள் நலப்பணிகள் முழுமைப்பெறாமல் இருப்பதை சுட்டிக்காட்டினார். மேலும் குபேர் திருமண நிலையம்  உடனடியாக திறக்க வேண்டும், ராசுஉடையார் தேட்டம் மற்றும் பிரான்சுவா வீதியில் நவீன கழிவறைக் கட்டும் பணி விரைந்து முடித்திடவும்  அலைன் வீதியில் வாய்க்கால் சீரமைப்பு மற்றும்  மிலன் வீதியில் நீர்வீழ்ச்சி இயக்கிடவும் அதிகாரி  கேட்டுக் கொண்டார்.

நீர்வீழ்ச்சி இயங்கிட தண்ணீர் பிரச்சனை இருப்பதாக அதிகாரிகள் கூறினார்கள் .உடனடியாக அத்துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்ட சட்டமன்ற உறுப்பினார் அனிபால் கென்னடி  அவர்கள் உடனடியாக தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு கண்டார் .தமிழ்தாய் நகரில் சாலை பணிகளையும் வாய்க்கால் பணிகளையும் விரைந்து முடித்து தருமாறு கேட்டுக் கொண்டார்.மேலும் வபுதுச்சேரி  உப்பளம் தொகுதியில் துவங்கப்பட்ட மக்கள் நலத் திட்டப்பணிகள் நிறைவு பெறாமல் இருப்பதைக்  குறித்து நகராட்சி அதிகாரிகளுடன் சட்டமன்ற உறுப்பினர்  அனிபால் கென்னடி அவர்கள் உடனடியாக பணிகளை முடித்துத் தருமாறு கேட்டுக் கொண்டார்.. 

சட்டமன்ற உறுப்பினர் நிதியில் கீழ் தொடங்கப்பட்டப் பணிகள் யாவும் முழுமைப் பெறாமல் தொகுதி முழுவதும் உள்ள  நலத்திட்டப்பணிகளை விரைந்து முடித்துத் தரும்படி அதிகாரிகளை சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் கேட்டுக் கொண்டார் அவருடன் உப்பளம் தொகுதி திமுக பொருளாளர் மணிமாறன் சிறுபான்மையினர் துணை அமைப்பாளர் நோயல் கிளைச்செயலாளர் காலப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

MLA Anibal Kennedy urged officials to expedite the completion of public welfare project works


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->