தி.மலை | வழிப்பறியில் போலி சாமியார்! கையும் களவுமாக சிக்கியது எப்படி?!
Tiruvannamalai devotee woman jewel robbery
ஆந்திர மாநிலம், திருப்பதியைச் சேர்ந்தவர் லாவண்யா. இவர் தனது உறவினருடன் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வந்து இன்று காலை கிரிவலம் சென்று கொண்டிருந்தபோது, செங்கம் செல்லும் சாலையை அடுத்துள்ள துர்வாசகர் முனிவர் கோவில் அருகில் ஓரமாக இருந்த காட்டுப்பகுதிக்குள் இயற்கை உபாதைகளை கழிக்க சென்றார்.
அப்போது காட்டுக்குள் இருளில் மறைந்திருந்த ஒருவர், அவரை கத்தியால் தாங்கி நகையை பறிக்க முயற்சி செய்துள்ளார். இதனை கண்ட லாவண்யா கத்தி கூச்சலிட்டுள்ளார்.

காட்டுப்பகுதிக்குள் பெண்ணின் அலறல் சத்தம் கேட்ட உறவினர்கள் மற்றும் கிரிவலப் பாதையில் சென்று கொண்டிருந்தவர் கொள்ளைகாரரிடம் இருந்து லாவண்யாவை மீட்டனர்.
பின்னர் கொள்ளை அடிக்க முயற்சி செய்தவரை பொதுமக்கள் பிடித்து சரமாரியாக அடித்து, திருவண்ணாமலை தாலுகா போலீசானிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் காவல் நிலையத்திற்கு வழிபறியில் ஈடுபட்டவரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் வழிபறியில் ஈடுபட்டவர், திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்த பாபு என்பது தெரியவந்தது.

மேலும் அவர் போலி சாமியாராக வளம் வருவதும் தெரிய வந்தது. இதனை அடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
இது தொடர்பாக பக்தர்கள் தெரிவிக்கையில், ''மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கிரிவல பாதையில் வரும் பக்தர்களின் நலனுக்காக அனைத்து கழிவறைகளையும் திறந்து வைத்து பராமரிக்க வேண்டும்.
கடந்த சில நாட்களாகவே கிரிவலப் பாதையில் சாதுக்கள் பேரவையில் ஆன்மீக பக்தர்களை மிரட்டுவதும், தாக்குவதும், கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபடுவது போன்ற சம்பவங்கள் வழக்கமாக நடைபெற்று வருகிறது.
உண்மையான சாதுக்கள் யார் என அறிந்து அவர்களை அடையாளப்படுத்துவதுடன் போலி சாமியார்களை பிடித்து கைது செய்ய வேண்டும்'' என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
English Summary
Tiruvannamalai devotee woman jewel robbery