திவ்ய தரிசன டோக்கன்: தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


ஆந்திர பிரதேசம் மாநிலத்தின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில், உலக பிரசித்தி பெற்ற இந்தியாவில் உள்ள மிகவும் சிறப்பு வாய்ந்த முக்கிய திருத்தலங்களில் ஒன்றாகும். இங்கு இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் பெறுவார்கள். மேலும் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர்.

இதில் திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்கு, அலிபிரி பூதேவி வளாகத்தில் அலிபிரி படித்துறை வழியாக திருமலைக்கு நடந்து செல்லும் பக்தர்களுக்கு மட்டுமே திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்கப்படுகிறது. இந்நிலையில், திவ்ய தரிசன டோக்கன் பெற்ற பக்தர்கள், அலிபிரிமெட்லா பாதையில் உள்ள கலிகோபுரத்தில் தரிசன டோக்கனை ஸ்கேன் செய்ய வேண்டும் என்றும், இல்லையெனில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

மேலும் திவ்ய தரிசன டோக்கன் பெற்ற பக்தர்கள் அலிபிரி படிகள் வழியாக மட்டுமே திருமலைக்கு செல்ல வேண்டும் என்றும், வேறு வழியில் திருமலை சென்றால் திவ்ய தரிசன டிக்கெட் பயன்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கம்போல் மெட்டு வழித்தடத்தில் டோக்கன்கள் வழங்கப்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirupati Devasthanam Important Announcement about Divya Darshan Token


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->