திருப்பதியில் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள விழா விவரங்கள்.! வெளியிட்டது தேவஸ்தானம்.! - Seithipunal
Seithipunal


திருப்பதியில் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள விழாக்களின் விவரங்களை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது திருப்பதி ஏழுமலையான் கோவில். இது இந்தியாவில் உள்ள மிகவும் சிறப்பு வாய்ந்த முக்கிய திருத்தலங்களில் ஒன்றாகும்.

 இங்கு ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் பிரம்மோற்சவம் நடைபெறும். இந்த பிரம்மோற்சவத்தின் போது பக்தர்கள் அதிக அளவில் வந்து ஏழுமலையானை தரிசித்து செல்வார்கள். இந்த புரட்டாசி மாத பிரம்மோற்சவத்திற்கு முன்பு, பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் இந்த ஆண்டு புரட்டாசி மாத பிரம்மோற்சவத்திற்கு முன்பு நடைபெறும் விழாக்கள் குறித்த விவரங்களை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

செப்டம்பர் 1-ஆம் தேதி ரிஷி பஞ்சமி, 6 மற்றும் 21-ந்தேதி சர்வ ஏகாதசி, 7-ந்தேதி வாமன ஜெயந்தி, 9-ந்தேதி அனந்த பத்மநாப விரதம், 11-ந்தேதி மகாளய பக்‌ஷம் ஆரம்பம், 13-ந்தேதி பிருஹத்யும விரதம் (உண்ட்ரால தத்தே), 20-ந்தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழாவையொட்டி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம், 25-ந்தேதி மஹாளய அமாவாசை.

26-ந்தேதி பிரம்மோற்சவ விழா அங்குரார்ப்பணம் மற்றும் செப்டம்பர் 27-ஆம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்க உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirupati Devasthanam has released the details of the September month ceremony


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->