திருப்பதி கோயிலில் பட்டு சால்வை விநியோகத்தில் ரூ. 54 கோடி மோசடி: தேவஸ்தானம் அதிர்ச்சி!
Tirumala Tirupati Devasthanam silk dupattas
திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் கலப்பட நெய் மற்றும் நன்கொடை திருட்டு சர்ச்சைகளைத் தொடர்ந்து, தற்போது பட்டுச் சால்வை ஊழல் வெளிவந்துள்ளது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2015 முதல் 2025 வரையிலான பத்தாண்டுக் காலத்தில் பட்டுச் சால்வைகள் விநியோகித்ததில் சுமார் ரூ. 54 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாகக் கோயிலை நிர்வகிக்கும் திருப்பதி தேவஸ்தானம் குற்றம் சாட்டியுள்ளது.
மோசடியின் விவரம்
விஐபி தரிசனத்தின்போது மற்றும் நன்கொடையாளர்களுக்கு வழங்கப்படும் 'பட்டுச் சால்வைகள்', உண்மையில் பட்டால் செய்யப்பட்டவை இல்லை என்றும், 100% பாலியஸ்டர் துணியால் செய்யப்பட்டவை என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஒரே நிறுவனம்: இந்தச் சால்வைகளை VRS Export என்ற ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே தொடர்ந்து கோயிலுக்கு விநியோகித்துள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை தேவஸ்தானம் ரத்து செய்தது.
இதுதொடர்பாகப் பேசிய தேவஸ்தானத் தலைவர் பி.ஆர். நாயுடு, "கொள்முதல் துறையில் சில முரண்பாடுகள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இதைக் கவனத்தில் கொண்டு, விசாரணையை மாநில ஊழல் தடுப்புப் பிரிவிடம் (Anti-Corruption Bureau) ஒப்படைத்துள்ளோம்," என்று கூறினார்.
English Summary
Tirumala Tirupati Devasthanam silk dupattas