மத்திய பிரதேசம் : கிறிஸ்துவ தேவாலயம் மீது தாக்குதல் நடத்திய உத்தர பிரதேச இளைஞர்கள் கைது.!
three uttar pradesh peoples arrested for church in madhya pradesh
மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள நர்மதபுரம் மாவட்டம் சிக்குபுரா கிராமத்தில் கிறிஸ்தவ மத வழிபாட்டுதலமான தேவாலயம் உள்ளது. இந்த வழிபாட்டுதலத்தில் பிரார்த்தனைகள் நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில், இந்த வழிபாட்டு தலம் நேற்று முன் தினம் மர்ம நபர்களால் சூறையாடப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், அந்த மர்ம கும்பல் அங்குள்ள சுவற்றில் 'ராம்' என்று எழுதி வைத்து விட்டு தப்பித்து ஓடியுள்ளனர்.
இதையடுத்து, போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, கிறிஸ்தவ மத வழிபாட்டு தலத்தை சூறையாடிவிட்டு சுவற்றில் 'ராம்' என்று எழுதி வைத்துவிட்டு தப்பியோடிய மர்ம கும்பலை தீவிரமாக தேடி வந்தனர். இதற்கிடையே, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, அவர்களிடம் விசாரணை செய்ததில், அவர்கள் மூன்று பேரும் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஆவேஷ் பாண்டே, ஆகாஷ் திவாரி மற்றும் சிவா என்பது தெரியவந்தது.

இதில் முக்கிய குற்றவாளியான ஆகாஷ் திவாரி, ஆவேஷ் மற்றும் சிவாவுக்கு பணம் அனுப்பி இதுபோன்ற மத வழிபாட்டு தலங்களில் தாக்குதல் நடத்தும்படி உத்தரவிட்டு வந்தாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, போலீசார் மூன்று பேரையும் சிறையில் அடைத்தனர்.
English Summary
three uttar pradesh peoples arrested for church in madhya pradesh