கழுத்தில் நல்ல பாம்பு: சிவன் போல் பக்தர்களுக்கு அருளாசி வழங்கும் சாமியார் வைரல்..! - Seithipunal
Seithipunal


கடந்த 2019-ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் பெண் சாமியார் ஒருவர் நல்லபாம்பை கழுத்தில் போட்டுக்கொண்டு அருள்வாக்கு அளித்தார். அந்த வீடியோ வெளியாகி வைரலான நிலையில் பெண் சாமியார் கபிலா கைது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

இந்நிலையில் தற்போது, அதேமாதிரி செங்கல்பட்டில் ஒரு சாமியார் நல்ல பாம்பை கழுத்தில் போட்டுக்கொண்டு பக்தர்களுக்கு அருளாசி தரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டம் மலாலிநத்தம் சித்தேரிக்கரை பகுதியில் அருள்மிகு ஸ்ரீ ஞான சக்தி நாகாத்தம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்தாண்டும் சித்ரா பவுர்ணமி தினத்தை முன்னிட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு யாக சாலைகள் அமைத்து 108 கலசங்களுடன் கூடிய மகா கும்ப கலசம் நிறுத்தப்பட்டு பல்வேறு வேள்விகள் நடைபெற்று முடிந்தது. தொடர்ந்து 11-ஆம் தேதி காலை அருள்மிகு தவத்திரு ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர சுவாமிகள் தலைமையில் கும்ப கலசம் புறப்பட்டு நாகாத்தம்மனுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து கும்பாபிஷேகத்தின் போது உயிருடன் உள்ள நல்லபாம்பு எடுத்து வரப்பட்டு தவத்திரு ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர சுவாமிகள் மற்றும் பக்தர்கள் முன்பு மேஜை மீது வைக்கப்பட்ட போது அந்த பாம்பு படம் எடுக்காமல் அமைதியாக படுத்திருந்தது. அப்போது, பாம்பை பிடித்து வந்த நபர் பாம்பின் முன்பு துணியை அசைத்து காட்டி அதனை எரிச்சல் அடைய செய்தார். 

தொடர்ந்து பாம்பின் மீது பூக்கள் தூவப்பட்டு பூஜை செய்து கொண்டிருந்த போது பாம்பு அங்கிருந்து நகர்ந்து தான் அடைத்து வைத்து கொண்டு வந்த கூடைக்குள் சென்று படுத்துக்கொண்டது. அப்போது குறித்த நல்ல பாம்பை கொண்டு வந்த நபர் அதனை கையால் உலுக்கி மீண்டும் படம் எடுக்க செய்தார். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் அதனை வீடியோ எடுத்துள்ளனர்.

அப்போது, நல்ல பாம்பிற்கு கற்பூரம் ஊதுவர்த்தி ஆகியவற்றால் தீபாராதனை காட்டிய தவத்திரு ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர சுவாமிகள் நல்ல பாம்பை கையால் தூக்கி பக்தர்கள் முன்பு காட்டியும், தனது கழுத்தில் பாம்பை மாலையாக போட்டுக்கொண்டு சிவன் போல் பக்தர்களுக்கு அருளாசி வழங்கியுள்ளார். இது தொரப்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வனத்துறையினர் உரிய விசாரணை நடத்தி வேண்டும் என வன உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A preacher offers blessings to devotees like Lord Shiva with a beautiful snake around his neck goes viral


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->