உ.பியில் சோகம் - செல்பி எடுக்கும்போது தவறி விழுந்து 3 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசியில் அமைந்திருக்கும் புனித தலங்களை பார்வையிடுவதற்காக பீகார் மாநிலத்தை சேர்ந்த 3 நண்பர்கள் நேற்று முன்தினம் சென்றுள்ளனர். அப்போது, கங்கை ஆற்றின் அருகே செல்பி எடுக்க முயன்றபோது, சோனா சிங் என்ற மாணவி ஆற்றில் தவறி விழுந்துள்ளார். 

உடனே அவரை காப்பாற்ற அவரது நண்பர்களான ரிஷி, வைபவ் சிங் உள்ளிட்ட இருவரும் ஆற்றில் குதித்துள்ளனர். ஆனால் மூன்று பேரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைந்து வந்து 3 பேரின் உடல்களையும் தீவிரமாக தேடினர். 

அதில், வைபவ் சிங் என்ற இளைஞரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. மற்ற 2 பேரின் உடல்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே வைபவ் சிங் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து சம்பவம் தொடர்பாக உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். செல்பி எடுக்கும் பொது ஆற்றில் விழுந்த நண்பரைக் காப்பாற்ற முயன்ற சக நண்பரும் சேர்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three peoples died in uttar pradesh due to take selfie


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->