12 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்த சக நண்பர்கள் - ம.பியில் பரபரப்பு..!!
three boys arrested for kill boy in madhya pradesh
12 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்த சக நண்பர்கள் - ம.பியில் பரபரப்பு..!!
மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள சியோனி மாவட்டத்தில் பன்னிரெண்டு வயது சிறுவனை மூன்று சிறுவர்கள் சைக்கிள் சங்கிலியால் கழுத்தை நெறித்து, தலையில் பெரிய கல்லை போட்டு, கத்தியால் உடலைக் கிழித்து கொலை செய்து சிறுவனின் உடலில் பிளாஸ்டிக் பையில் அடைத்து விட்டு, வீட்டிற்கு அருகே இருந்த குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு தப்பித்துச் சென்றுள்ளனர்.
இதைப்பார்த்த அப்பகுதி பெண் ஒருவர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் அளித்துள்ளார். அதன் படி அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குப்பைத் தொட்டியில் கிடந்த சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னர் போலீசார் சிறுவனைக் கொலை செய்த மூன்று சிறுவர்களையும் கைது செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்களை சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் தெரிவித்ததாவது, "பண பிரச்சனை காரணமாக பன்னிரெண்டு வயது சிறுவனை சக நண்பர்கள் மூன்று பேர் திட்டமிட்டு கொடூரமாகக் கொலை செய்துள்ளார்கள்.
இந்த கொலையைப் பார்க்கும் போது அந்த மூன்று சிறுவர்களும் தொடர்ந்து கொலை செய்பவர்களைப் போல எந்தவித பயமும் இல்லாமல் இயல்பாக செய்துள்ளனர்" என்றுத் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
.
English Summary
three boys arrested for kill boy in madhya pradesh