ஆபரேஷன் தியேட்டரில் டாக்டர் செய்யும் வேலையா இது! வெகுண்டெழுந்த மக்கள்!! - Seithipunal
Seithipunal


கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான்  கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் பரமசாகர் பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த  அடிப்படையில் டாக்டராக அபிஷேக் என்பவர்  பணியில் சேர்ந்தார்.  இந்த நிலையில் அவருக்கு நிச்சயமானது.  தனது வருங்கால மனைவியுடன் திருமணத்துக்கு முந்தைய 'போட்டோஷூட்டை' வித்தியாசமாக எடுக்க அபிஷேக் முடிவு செய்தார்.

 
அப்போது தான் அவருக்கு வித்தியாசமான ஆசை வந்தது. தான் பணியாற்றும் பரமசாகர் அரசு ஆஸ்பத்திரியிலேயே போட்டோஷூடை  வித்தியாசமாக நடத்த முடிவு செய்தார். அப்போது  ஆபரேஷன் தியேட்டரில் வைத்து நோயாளிக்கு அபிஷேக் அறுவை சிகிச்சை செய்வது போலவும், அதற்கு அவருடைய வருங்கால மனைவி உதவுவது போலவும், ஆப்ரேஷனுக்கு பின் நோயாளி எழுந்து அமர்வது போலவும் போட்டோஷூட் நடத்தி உள்ளனர். 

இதனை வீடியோவாக எடுத்து சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளனர்.  இந்த போட்டோஷூட் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானதும் அதனை பார்த்து அனைத்து தரப்பினரும் டாக்டர் அபிஷேக்கை  மற்றும் அவரது வருங்கால மனைவியை கடுமையாக கண்டித்தனர்.

இந்நிலையில்,  தியேட்டரில் போட்டோஷூட் நடத்திய டாக்டர் அபிஷேக்கை பணி நீக்கம் செய்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி ரேணுகா பிரசாத்  உத்தரவிட்டுள்ளார். 

கடவுளுக்கு இணையாக மதிக்கப்படும் டாக்டர் தொழிலை இழிவு படுத்திவிட்டதாக நெட்டிசன்கள்  கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

This is the work of a doctor in the operation theater! Awake people!!


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->