அசாமின் நகோன் மாவட்டத்தில் நிலநடுக்கம்: ஓரே மாதத்தில் 07-வது முறை: பீதியில் மக்கள்..! - Seithipunal
Seithipunal


அசாமின் நகோன் மாவட்டத்தில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 35 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கத்தின் திறன் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இன்று, மதியம் 12:09 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கமானது தேஸ்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

அதாவது, தேஸ்பூரிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் 35 கிலோமீட்டர் ஆழத்தில், 26.28°N அட்சரேகை மற்றும் 92.71°E தீர்க்கரேகையுடன் மையப்பகுதி அமைந்திருந்ததாக தேசிய நிலநடுக்கவியல் மையம் (NCS) தெரிவித்துள்ளது. இந்த மாதத்தில் அசாமில் ஏற்பட்ட 07 வது நிலநடுக்கமாக இது பதிவாகியுள்ளது. 

இதே பகுதில் கடந்த ஆகஸ்ட் 07 மற்றும் 08-ஆம் தேதி முறையே 3.8, 2.8 நிலநடுக்கம் உணரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

This is the 7th earthquake to hit Assam in a single month


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->