பெங்களூர் : போலீசார் முகத்தில் பெப்பர் ஸ்பிரே அடித்துவிட்டு தப்பி சென்ற ரவுடி கைது.! - Seithipunal
Seithipunal


பெங்களூருவில் போலீசார் முகத்தில் பெப்பர் ஸ்பிரே அடித்து விட்டு தப்பி சென்ற ரவுடியை கைது செய்தனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியை சேர்ந்தவர் ரவுடி மனு. இவர் மீது காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில், மனு அண்மையில் தான் ஜாமினில் வெளியே வந்தார். இதையடுத்து மற்றொரு வழக்கில் மனுவை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் மங்கனஹள்ளி பகுதியில் மனு இருப்பதாக விஜயநகர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபில்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்பொழுது போலீசாரை பார்த்த மனு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இதையடுத்து போலீசார் துரத்திச் சென்று மனுவை பிடித்தனர். ஆனால் மனு மறைத்து வைத்திருந்த பெப்பர் ஸ்பிரேவை போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள்கள் முகத்தில் அடித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதைத்தொடர்ந்து மனுவை பிடிக்க விஜயநகர் போலீசார் தீவிரமாக தேடி வந்தநிலையில் நேற்று கோவிந்தராஜ்நகரில் சுற்றித்திரிந்த மனுவை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The rowdy who ran away after being pepper sprayed in the police face by the police was arrested in bangalore


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->