திடீர் பிரேக் விபரீதம்:கல்லூரி மாணவன் மரணம்...! காப்பீட்டு நிறுவனம் ரூ.33.75 லட்சம் வழங்க நீதிமன்ற உத்தரவு
Sudden braking leads tragedy College student dies Court orders insurance company pay 33point75 lakhs
சென்னை கோபாலபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரின் மகன் ஜித்தின் ஜோஸ்வா (20), தாம்பரத்தில் செயல்பட்டு வரும் எம்.சி.சி. கல்லூரியில் இளங்கலை சமூகப்பணி பாடப்பிரிவில் 3ஆம் ஆண்டு பயின்று வந்தார்.
கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி, ஜித்தின் ஜோஸ்வா மோட்டார் சைக்கிளில் வேளச்சேரி மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற கார் திடீரென பிரேக் பிடித்தது.

இதனால், காரின் பின்புறம் அவரது இருசக்கர வாகனம் மோதி கடும் விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த ஜித்தின் ஜோஸ்வா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த விபத்து தொடர்பாக உரிய இழப்பீடு கோரி, அவரது தந்தை ஜெயக்குமார் சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி, விபத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவனின் குடும்பத்தினருக்கு தனியார் காப்பீட்டு நிறுவனம் ரூ.33 லட்சத்து 75 ஆயிரத்து 600 இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
English Summary
Sudden braking leads tragedy College student dies Court orders insurance company pay 33point75 lakhs