மொழிப்போர் தியாகிகள் நினைவு நாள்: எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தல்...!
Language Martyrs Day Edappadi Palaniswami pays tribute
தமிழ் மொழிக்காக உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளை நினைவுகூரும் வகையில், ஜனவரி 25ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளாக அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, மொழிப்போர் தியாகிகளின் புகைப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து, தியாகிகளின் தியாகத்தை நினைவுகூர்ந்து, அவர்களின் வீரத்தை போற்றும் வகையில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழ்மொழியின் உரிமை மற்றும் மரியாதைக்காக தன்னுயிர் அர்ப்பணித்த தியாகிகளின் நினைவு என்றும் தமிழர்களின் உள்ளங்களில் நிலைத்து நிற்கும் என அவர் தெரிவித்துள்ளார்.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் தெரிவித்ததாவது,"
சங்கத்தில் வளர்ந்து,
சரித்திரங்கள் பல படைத்து,
சீரிளமை கொண்டு விளங்கும்,
நம் உயிருக்கு நேராம்,
செந்தமிழர் தாயாம்,
அன்னைத் தமிழை காக்க
தன்னுயிர் நீத்த
மொழிப்போர் தியாகிகளுக்கு
வீரவணக்கம்!
இவ்வாறு அந்தப் பதிவின் வழியே அவர் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
English Summary
Language Martyrs Day Edappadi Palaniswami pays tribute