மதுரை அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்துகள் கோர மோதல்…! - 3 பேர் பலி, 15 காயம்
horrific collision involving omni buses national highway near Madurai 3 dead 15 injured
சென்னையிலிருந்து நெல்லை நோக்கிச் சென்ற தனியார் ஆம்னி பேருந்து மீது மற்றொரு ஆம்னி பேருந்து பின் தொடர்ந்து வந்து மோதியதில் கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் 15க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள பள்ளப்பட்டி பகுதியில், தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் நின்றிருந்த ஆம்னி பேருந்தின் மீது, பின்னால் வந்த மற்றொரு ஆம்னி பேருந்து அசுர வேகத்தில் மோதியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மோதலில் நின்றிருந்த பேருந்தின் பின்புறம் கடுமையாக நசுங்கி சேதமடைந்தது. விபத்தில் சிக்கி அபயக்குரல் எழுப்பிய பயணிகளை, அங்கு இருந்த பொதுமக்கள் விரைந்து மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீப காலமாக ஆம்னி பேருந்துகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கி உயிரிழப்புகளுக்கு காரணமாகி வருவது, பயணிகள் மத்தியில் பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
horrific collision involving omni buses national highway near Madurai 3 dead 15 injured