என்டிஏ கூட்டணியில் அமமுகக்கு 7 தொகுதிகள்? – ராஜ்யசபா சீட்டுக்காக டிடிவி தினகரன் பிடிவாதம்! அமித்ஷா கொடுத்த வாக்கு! - Seithipunal
Seithipunal


சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருக்கும் நிலையில், டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) அதிகாரபூர்வமாக இணைந்துள்ளது. இந்த கூட்டணியில் அமமுகவுக்கு 7 தொகுதிகள் வரை மட்டுமே ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த டிடிவி தினகரன், தொகுதி எண்ணிக்கை குறைக்கப்பட்டதை ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, “தொகுதிகள் குறைந்தாலும் ஒரு ராஜ்யசபா சீட் வேண்டும்” என அவர் கடுமையாக வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கோரிக்கைக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சாதகமான சிக்னல் கொடுத்த பின்னரே அமமுக கூட்டணியில் இணைவதற்கான இறுதி ஒப்புதல் வழங்கியதாக கூறப்படுகிறது.

என்டிஏ பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி – டிடிவி தினகரன் இருவரும் ஒருவரை ஒருவர் “அண்ணன் – சகோதரர்” என அழைத்து மேடையில் தோன்றியது அரசியல் ரீதியாக கவனம் பெற்றது. இதனைத் தொடர்ந்து இருவரும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். இதன் மூலம் தென் மாவட்டங்களில், குறிப்பாக டெல்டா பகுதிகள், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் முக்குலத்தோர் வாக்குகளை அதிமுக பக்கம் திருப்ப அமமுக உதவும் என கணிக்கப்படுகிறது.

ஆனால் தொகுதி பங்கீடு விஷயத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதியான நிலைப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. அமமுகவுக்கு குறைந்த அளவிலான தொகுதிகள் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்றும், மொத்தமாக பாஜகவுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு அதன் பின்னர் உள் ஒதுக்கீடாக கூட்டணிக் கட்சிகளுக்கு வழங்கப்படும் என்ற முடிவே எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் காரணமாகவே டிடிவி தினகரன், டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. அந்த சந்திப்பின்போது இரட்டை இலக்கத் தொகுதிகள் சாத்தியமில்லை என்பதை அமித் ஷா நேரடியாக தெரிவித்ததாகவும், அதிகபட்சமாக ஒற்றை இலக்கத் தொகுதிகளே வழங்க முடியும் என்று கறாராக கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

இதையடுத்து, ராஜ்யசபா சீட் கோரிக்கையை முன்வைத்த டிடிவி தினகரனுக்கு பாசிட்டிவ் சிக்னல் கிடைத்ததால், அவர் கூட்டணியில் இணைந்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் டிடிவி தினகரன் எதிர்காலத்தில் ராஜ்யசபா எம்பியாகும் வாய்ப்பு அதிகம் எனவும் பேசப்படுகிறது.

இதற்கிடையே, ஆண்டிபட்டி தொகுதியில் டிடிவி தினகரன் நேரடியாக போட்டியிடுவது குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளன. அவருக்கு பதிலாக அவரின் மனைவியை வேட்பாளராக களமிறக்க வாய்ப்பு உள்ளது என அமமுக வட்டாரங்களிலேயே பேசத் தொடங்கியுள்ளனர்.

என்டிஏ கூட்டணியில் அமமுக இணைந்தது அதிமுகவுக்கு வாக்கு வங்கியை விரிவுபடுத்த உதவலாம் என்றாலும், தொகுதி பங்கீடு மற்றும் பதவி அரசியல் தொடர்ந்து அந்த கூட்டணிக்குள் புதிய சமன்பாடுகளை உருவாக்கி வருவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

7 seats for AMMK in NDA alliance TTV Dhinakaran is adamant about Rajya Sabha seat Amit Shah promise


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->