இந்திய மாணவர்கள் விரும்பினால் ஹங்கேரியில் படிப்பை தொடரலாம்.. அதிபர் அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


இந்திய மாணவர்கள் விரும்பினால் ஹங்கேரியில் படிப்பை தொடரலாம் என அந்நாட்டு பிரதமர் அறிவிப்பு

உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக அங்குள்ள வெளிநாட்டவர்களை அந்தந்த நாட்டு அரசுகள் மீட்டு வருகின்றனர். இந்திய அரசு ஆப்ரேஷன் கங்கா என்ற திட்டத்தின் மூலம் இந்தியர்களை மீட்டு வருகிறது. உக்ரைனில் இருந்து சுமார் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உக்ரைன், ஹங்கேரி எல்லை இருந்து நாடு திரும்பினர்.

இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன்ஹங்கேரி நாட்டின் பிரதமர் விக்டர் ஆர்பன் தொலைப்பேசி வாயிலாக கலந்துரையாடினார். அப்போது, இந்தியர்களை ஹங்கேரி வாயிலாக வெளியேற்ற உதவியதற்கு நன்றி தெரிவித்தார்.

உக்ரைனில் இருந்து நாடு திரும்பியவர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு உக்ரைனில் பாதியிலேயே படிப்பை தொடரமுடியாமல் நாடு திரும்பிய இந்திய மாணவர்கள் விரும்பினால் ஹங்கேரியில் படிப்பை தொடரலாம் எனவும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The Prime Minister announced that Indian students can continue their studies in Hungary if they wish


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->