சிங்கங்களின் எண்ணிக்கை 891 ஆக உயர்வு..எங்கு தெரியுமா?
The number of lions has increased to 891 Do you know where?
குஜராத்தில் ஆசிய சிங்கங்கள் கடந்த 5 ஆண்டுகளில் 217 அதிகரித்து உள்ளது என வனத்துறை தெரிவித்துள்ளது.
குஜராத்தின் 11 மாவட்டங்களில் உள்ள காடுகளில் ஆசிய சிங்கங்கள் அதிக அளவில் காணப்படும் .குஜராத் மாநில வனத்துறையால் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சிங்க கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு 6-வது ஆசிய சிங்க கணக்கெடுப்பு பணி 3 ஆயிரம் தன்னார்வலர்கள் உதவியுடன் கடந்த 10-ந்தேதி தொடங்கி நடைபெற்றது.
அந்த கணக்கெடுப்பு பணியில் ஆசிய சிங்கங்கள் கடந்த 5 ஆண்டுகளில் 217 அதிகரித்து உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது . மேலும் மொத்த ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை 891 ஆக அதிகரித்துள்ளது என வன தலைமை பாதுகாவலர் ஜெய்பால் சிங் கூறினார். மேலும் அவர் கூறியதாவது:-கிர் தேசிய பூங்கா மற்றும் வனவிலங்கு சரணாலயத்தில் மட்டும் 384 சிங்கங்கள் . எல்லைக்கு வெளியே 507 சிங்கங்கள் . இதில் 196 ஆண் சிங்கங்கள், 330 பெண் சிங்கங்கள், 140 இளம் சிங்கங்கள், 225 சிங்கக்குட்டிகள் இருப்பதாக கூறினார்.
சிங்கங்களை அடையாளம் காண உயர் தெளிவுத்திறன் கொண்ட கேமராக்கள் மற்றும் ரேடியோ காலர்கள் போன்ற உயர் தொழில்நுட்ப கருவிகள் பயன்படுத்தப்பட்டன. கடைசியாக 2020-ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 674 சிங்கங்கள் இருந்தன. போர்பந்தரில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள பர்தா சரணாலயத்தில் 17 சிங்கங்கள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
English Summary
The number of lions has increased to 891 Do you know where?