விதிமீறல்கள் நடந்தால் மறுதேர்தல்: மேற்கு வங்கத்திற்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை..! - Seithipunal
Seithipunal


மேற்கு வங்கத்தில் வரும் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் 02 கட்​ட​மாக தேர்​தல்  நடைபெறவுள்ளது. மே 04-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இந்த மாநிலத்தில் பொது​வாக தேர்தலின்​ போது வன்​முறை சம்​பவங்​கள் அதிகம் நிகழ்​வது வழக்​க​ம். இந்த முறை தேர்​தல் ஆணை​யம் விதி​களை மிக தீவிரமாக அமல்​படுத்​த தயா​ராகி வரு​கிறது. விதிகளை மீறினால் மறுதேர்தல் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்​பாக, வாக்​குச்​சாவடி அதி​காரி​கள் மற்றும் தலைமை அதி​காரி​களுக்​கு தேர்​தல் ஆணை​யம் தெளிவான அறி​வுறுத்​தலை வழங்கியுள்​ளது. இந்த முறை முதன்​முறை​யாக, செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) வசதியுடன் கூடிய சிசிடிவி கேம​ராக்​கள் மூலம் வாக்​குச்​சாவடிகள் நேரலை​யாக கண்​காணிக்​கப்​படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு கேம​ராக்​கள் அணைக்கப்பட்​டாலோ அல்​லது சந்​தேகத்​துக்கு இட​மான நடவடிக்கைகள் கண்​டறியப்​பட்​டாலோ உடனடி​யாக மறு​ தேர்தலுக்கு உத்​தர​விடப்​படும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Election Commission warns that re elections will be held in West Bengal if violations occur


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




சினிமா

Seithipunal
--> -->