ஓரினச்சேர்க்கை தம்பதியருக்கு மருத்துவ சிகிச்சை வழக்கு; அதிகாரப்பூர்வமாக நீதிமன்ற ஆவணங்களில் தாக்கல் செய்யப்படாத மத்திய அரசின் பதில் மனு ஊடகங்களுக்கு கசிந்தது எப்படி?. டெல்லி உயர்நீதிமன்றம் கண்டனம்..! - Seithipunal
Seithipunal


ஓரினச்சேர்க்கை தம்பதியருக்கு மருத்துவ சிகிச்சை ஒப்புதல் வழங்கும் விவகாரத்தில், தங்களுக்கு சமர்ப்பிக்கும் முன்பாக மத்திய அரசின் பதில் மனு ஊடகங்களுக்கு கசிந்தது எப்படி என டெல்லி உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. 

கடந்த 2023-ஆம் ஆண்டு நியூசிலாந்தில், பெண் ஒருவரை திருமணம் செய்துகொண்ட மற்றொரு இந்தியப் பெண், டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில் அவர், 'மருத்துவ அவசர காலங்களில் நோயாளியின் கணவர், மனைவி அல்லது பெற்றோர் மட்டுமே சிகிச்சைக்கான ஒப்புதலை வழங்க முடியும் என்ற விதிமுறை தற்போதைய மருத்துவ நடைமுறைகளில் உள்ளது.

ஓரினச்சேர்க்கை தம்பதியரின் குடும்பத்தினர் வெளிநாடுகளிலோ அல்லது தொலைதூர மாநிலங்களிலோ வசிக்கும் சூழலில், அவசர சிகிச்சைக்கு உடனடி ஒப்புதல் அளிக்க முடியாத சிக்கல் ஏற்படுகிறது. எனவே, மாற்று பாலின ஈர்ப்பு கொண்ட இணையர்களை மருத்துவ பிரதிநிதிகளாக அங்கீகரித்து சிகிச்சை ஒப்புதல் வழங்க மருத்துவமனைகளுக்கும் டாக்டர்களுக்கும் உரிய வழிகாட்டுதல்களை பிறப்பிக்க வேண்டும்.'' என்று கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 2025-ஆம் ஆண்டு மத்திய அரசு மற்றும் தேசிய மருத்துவ ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிமன்றம், பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி சுவர்ண காந்த சர்மா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் பதில் மனுவில் ஓரினச்சேர்க்கை இணையர்களுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தியை  நீதிபதி சுட்டிக்காட்டினார்.

அதாவது, ''நீதிமன்றத்தின் பார்வைக்கே வராத மத்திய அரசின் பதில் மனு, ஊடகங்களுக்கு சென்றது எப்படி? இந்த விவகாரத்தில் பதில் மனு இன்னும் அதிகாரப்பூர்வமாக நீதிமன்ற ஆவணங்களில் தாக்கல் செய்யப்படாத நிலையில், பத்திரிகைகளுக்கு தகவல் கசிந்தது ஆச்சரியமளிக்கிறது.''என்று அதிருப்தி தெரிவித்தார்.

இதற்கு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சேத்தன் சர்மா பதிலளிக்கையில், 'ஊடகங்களுக்கு அரசு எந்த ஆவணத்தையும் வழங்கவில்லை; இதில் சில பிரச்னைகள் உள்ளதால் சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராக அவகாசம் தேவை.' என்று விளக்கம் அளித்தார். இதையடுத்து மனுதாரர் தரப்பு வாதங்களை பதிவு செய்த நீதிபதி, அரசு தரப்பு பதில் மனுவை அடுத்த 02 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 05-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Delhi High Court expressed displeasure over how the Central Governments counter affidavit in the case concerning medical treatment for same sex couples was leaked to the media


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->