சாலையில் சென்ற போது தீப்பற்றிய பேருந்து.. அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணிகள்..! - Seithipunal
Seithipunal


சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடக மாநிலம், சாம்ராஜ்பேட் பகுதியில் பயணிகளுடன் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பேருந்தின் இன்ஜினில் இருந்து கரும்புகை வெளிவந்தது. இதனை கண்ட அந்த பேருந்தின் ஓட்டுநர் சாலை ஓரத்தில் பேருந்தை நிறுத்தி பயணிகள் இறங்க சொல்லியுள்ளார்.

அவர்கள் இறங்கிய சிறிது நேரத்திலேயே பேருந்து மளமளவென தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புதுறையினர் பேருந்தில் பற்றி இருந்த தீயை அணைத்தனர். சாலையில் பேருந்து தீப்பற்றியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The bus caught fire when it went on the road


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->