இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு எதிரானவர்களை சந்தித்து, ராகுல் சதி செய்கிறார்; பாஜ குற்றச்சாட்டு..! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது வெளிநாட்டு பயணங்களின் போது இந்தியாவின் நலன்கள் மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிரானவர்களை சந்தித்து, சதி செய்வதாக பாஜ கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பில், பாஜ தலைவர் கவுரவ் பாட்டியா தலைநகர் டில்லியில் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியுள்ளார். அத்துடன், ராகுல் தனது வெளிநாட்டு பயணத்தின் போதெல்லாம், இந்தியாவை அவமதிப்பதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளார் என்றும் விமர்சித்துள்ளார்.

அவர், இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர்களை சந்தித்து, தேசிய நலன்களுக்கு எதிராக செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார் என்றும், இத்தகைய செயல்களை ராகுலை தவிர வேறு எந்த இந்தியத் தலைவர்களும் செய்வதில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார். இது மிகவும் கவலைக்குரிய செயல் எனவும், ராகுலின் இதுபோன்ற செயல்பாடுகள் இந்திய குடிமகன்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கவுரவ் பாட்டியா தெரிவித்துள்ளார்.

மேலும், பாராளுமன்ற கூட்டத்தொடரின் போதே ராகுல் அதிக வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வதாகவும்,  பாராளுமன்ற கூட்டங்களின் போது, எதிர்க்கட்சி தலைவர் இருக்க வேண்டியது முக்கிய கடமையாகும். ஆனால், ஆவர் அதனை மீறுகிறார். தற்போது, ஜெர்மனி சென்றுள்ள ராகுல், ஹெர்ட்டி பள்ளிக்கு சென்று அங்குள்ள பேராசிரியர் கார்னேலியா வோலை சந்தித்து பேசியுள்ளார். இது பல்வேறு கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பியுள்ளதாக கூறியுள்ளார்.

ராகுல் வெளிநாடு செல்லும் போது எல்லாம் இந்தியாவுக்கு எதிரானவர்கள், இந்திய நலன்கள் மற்றும் ஒருமைப்பாட்டை விரும்பாதவர்களை சந்தித்து உறவாடுகிறார் என்றும், இது எந்த மாதிரியான இந்திய எதிர்ப்பு கொள்கை எனத் தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளதோடு, இதுபோன்ற இந்தியாவுக்கு எதிரான சக்திகளை சந்தித்து சதி செய்கிறார் என்று பாஜக செயல் தலைவர் கவுரவ் பாட்டியா குற்றம் சாட்டியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The BJP alleges that Rahul is conspiring by meeting with those who are against Indias unity


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->