ரெயிலில் இருந்து ஏவப்பட்ட அக்னி பிரைம் ஏவுகணை...முதல் பரிசோதனை வெற்றி!
The Agni Prime missile launched from the train first test successful
நாட்டிலேயே முதன்முறையாக ரெயிலில் இருந்து ஏவப்பட்ட அக்னி பிரைம் ஏவுகணை பரிசோதனை வெற்றி பெற்றுள்ளது.இந்த வெற்றிக்கு பாதுகாப்பது துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.
2 ஆயிரம் கி.மீ. தொலைவை சென்று தாக்கும் திறன் படைத்த ரெயிலில் இருந்து ஏவப்பட்ட அக்னி பிரைம் ஏவுகணை பரிசோதனை வெற்றி பெற்றுள்ளது.பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகத்தின் சார்பில், நாட்டிலேயே முதன்முறையாக ரெயிலில் இருந்து அக்னி பிரைம் ஏவுகணையை ஏவி பரிசோதனை செய்யப்பட்டது. அடுத்த தலைமுறையை சேர்ந்த இந்த ஏவுகணையில் பல்வேறு நவீன வசதிகள் உள்ளன.
இந்திய ரெயில்வே நெட்வொர்க்குடன் ஒருங்கிணைந்து, சிறப்பாக வடிவமைக்கப்பட்ட நடைமேடையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ரெயிலில் இருந்து அக்னி பிரைம் ஏவுகணை ஏவப்பட்டது.
இந்த சோதனையின் மூலம் ஒரு சில நாடுகளே கொண்டிருக்கும் இந்த தனித்தன்மை வாய்ந்த திறன்களை இந்தியாவும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது . இந்த பரிசோதனைக்காக டி.ஆர்.டி.ஓ.வுக்கு மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டுகளை தெரிவித்து உள்ளார்.
கடந்த ஆகஸ்டு மாதத்தில் ஒடிசாவின் சண்டிப்பூர் நகரில் அக்னி ஏவுகணை பரிசோதனை நடைபெற்றது. அது வெற்றியடைந்த நிலையில் இந்த சோதனை நடத்தப்பட்டு உள்ளது இந்தியாவுக்கு கூடுதல் சிறப்பாக உள்ளது.
English Summary
The Agni Prime missile launched from the train first test successful