இந்தியாவுக்கு எதிராக போர்? மணிப்பூர் கலவர விசாரணையில் வெளியான பகீர் தகவல்! - Seithipunal
Seithipunal


மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி மற்றும் குகி இன மக்களுக்கு இடையே நீடித்து வந்த மோதல் கடந்த மே மாதம் 3-ந்தேதி பெரும் கலவரமாக மாறியது. சுமார் 180க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் நூற்றுக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் தலைவர் தன பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரணம் முகாம்களின் தஞ்சம் அடைந்தனர். 

மேலும் குதி இனத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை ஒரு கும்பல் நிர்வாணப்படுத்தி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. அதனைத் தொடர்ந்து மணிப்பூர் கலவரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு பரிந்துரை செய்தது.

இதற்கிடையே உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டதோடு மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த புலனாய்வு அதிகாரிகள் இந்த வழக்கை விசாரணை செய்யவும் பரிந்துரை செய்தது.

இந்த நிலையில் மெய்தி இனத்தை சேர்ந்த இரண்டு மாணவர்கள் குகி இனத்தை சேர்ந்தவர்களால் கடத்தி படுகொலை செய்யப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வெளியாகி நாட்டையே மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனால் மணிப்பூரில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவியது.

இந்த நிலையில் மணிப்பூர் கலவரத்தை பயன்படுத்தி இந்தியாவுக்கு எதிராக போர் தொடுக்க மியான்மர் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த தீவிரவாத அமைப்புகள் நாடு கடந்து சதித்திட்டம் தீட்டியது தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்று மேலும் ஒருவரை கைது செய்துள்ளனர். 

என்ஐஏ அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்ட செய்மின்லென் கேங்டே என்பவரை டெல்லிக்கு அழைத்துச் சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த திட்டமிட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபரிடம நடத்திய விசாரணையில் மியான்மர் மற்றும் வங்கதேசத்தை தளமாகக் கொண்டு செயல்படும் தீவிரவாத குழுக்கள் பல்வேறு இன குழுக்கள் உடன் இடையே பிளவை ஏற்படுத்த நோக்கத்துடன் இந்தியாவில் உள்ள தீவிரவாத தலைவர்களின் ஒரு பிரிவினருடன் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டது சதி திட்டம் தீட்டியது தெரிய வந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Terrorist plan to war against India through Manipur riots


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->