வங்கதேசத்தில் வன்முறையின் உச்சம்; பாராளுமன்றத்தில் நுழைய முற்படும் போராட்டக்காரர்கள்; பல இடங்களில் ராணுவ பாதுகாப்பு..!
Tensions persist in Bangladesh as protesters attempt to enter the parliament building
வங்கதேசத்தில் வன்முறையில் ஈடுபட்டு வரும் போராட்டக்காரர்கள், அந்நாட்டின் பாராளுமன்றத்தில் நுழைய முயற்சித்ததால் அங்கு பதற்றம் நீடித்து வரும் நிலையில், ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சமீபத்தில் மாணவர் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி என்பவர் மர்ம நபர்களால் தலையில் சுடப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த டிசம்பர் 18-ஆம் தேதி உயிரிழந்த்தார். இதை தொடர்ந்து அங்கு மீண்டும் பயங்கர கலவரம் வெடித்துள்ளது. ஷெரீப் ஓஸ்மான் ஹாதி உயிரிழந்ததை தொடர்ந்து, ஹிந்து இளைஞரை ஒருவரை நபி அவர்களை அவதூறாக பேசியதாக கூறி முஸ்லிம் கும்பல் கொடூரமான முறையில் அடித்தே கொன்றுள்ளதோடு, அவர் உடலை சாலையில் போட்டு தீவைத்து எரித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன், அங்குள்ள பத்திரிகை அலுவலகங்களுக்கு தீ வைத்ததுடன், டாக்காவில் உள்ள இந்திய துாதரகம் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியதில், முழு வங்கதேசமே கலவர பூமியாக காட்சியளிக்கிறது.
அங்குள்ள முன்னாள் அமைச்சர் மொஹிபுல் ஹசன் சவுதுரி நவுபலின் இல்லம் தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்ட நிலையில், போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் பாராளுமன்ற வளாகம் உள்பட டாக்காவின் முக்கிய இடங்களில் குவிக்கப்பட்டனர். இதனால், பல இடங்களில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், பல பகுதிகள் இன்னும் வன்முறை சம்பவங்களால் பதற்றமாகவே உள்ளது.

இந்த சூழலில் மர்ம நபர்களால் தலையில் சுடப்பட்டு கொல்லப்பட்ட ஹாதியின் உடலுக்கு பலத்த பாதுகாப்புடன் இன்று இறுதி மரியாதை நடந்தது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்றனர்.
இதன் பின்னர், பாராளுமன்ற வளாகம் முன்பு குவிந்து வரும் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள், உள்ளே நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராணுவம் மற்றும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். ஆனாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் பலத்த ராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் வங்கதேசத்தின் இயல்புநிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
English Summary
Tensions persist in Bangladesh as protesters attempt to enter the parliament building