டெல்லியில் பயங்கரவாத கும்பல் சதி சிதறியது...! 5 பயங்கரவாதிகள் கைது...!
Terrorist gang conspiracy foiled Delhi 5 terrorists arrested
டெல்லியில் அதிரடி நடவடிக்கை, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 5 பேரைக் காவல்துறையினர் பயங்கரவாத குற்றச்சாட்டில் கைதுசெய்துள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து வெடிகுண்டு தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட முக்கிய உதிரிப்பாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

அந்த விசாரணையில், இவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் சிந்தனைகளால் பாதிக்கப்பட்டு, மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதலை திட்டமிட்டிருந்தது வெளிச்சம் பார்த்துள்ளது.
மேலும், கைது செய்யப்பட்டவர்களில் சிலர் ரசாயன குண்டுகள் உருவாக்கத்தில் நிபுணத்துவம் பெற்றவர்கள் என்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து,ஹைதராபாத், மத்தியப் பிரதேசம், டெல்லி மட்டுமல்லாது மும்பை, ஜார்க்கண்ட் உள்ளிட்ட பல இடங்களில் காவலர்கள் தீவிர சோதனைகளை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
English Summary
Terrorist gang conspiracy foiled Delhi 5 terrorists arrested