இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை - கோவில் பூசாரி எடுத்த விபரீத முடிவு.!
temple priest sucide for harassment case in maharastra
மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை புறநகர் மாவட்டம் கண்டிவாலி பகுதியில் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் 52 வயது நபர் பூசாரியாக பணியாற்றி வந்தார். இவர் 19 வயது இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண் பூசாரி மீது கண்டிவாலி காவல் நிலையத்தில் இன்று அதிகாலை 2 மணியளவில் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரை தொடர்ந்து போலீசார் பூசாரியிடம் விசாரிக்க அவரை தேடியுள்ளனர். அப்போது, பூசாரி பூஜை செய்யும் கோவிலுக்கு சென்று போலீசார் பார்த்தபோது, கோவில் வளாகத்தில் உள்ள பேனில் பூசாரி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்துள்ளார்.

இதைபார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார், பூசாரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பூசாரி தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
temple priest sucide for harassment case in maharastra