ராஜஸ்தானில் ஆசிரியையுடன் ஓட்டம் பிடித்த பள்ளி மாணவி - சென்னையில் கைது.!
teacher run with school student in rajasthan
ராஜஸ்தானில் ஆசிரியையுடன் ஓட்டம் பிடித்த பள்ளி மாணவி - சென்னையில் கைது.!
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிகானிர் மாவட்டத்தில் தனியார் பள்ளி ஒன்றில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி கடந்த சனிக்கிழமை முதல் காணாமல் போயுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
இதேபோல், அதே பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியை ஒருவரும் காணமல் போயுள்ளதாக அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். மாணவி காணாமல் போன அதே நாளில் ஆசிரியையும் காணாமல் போனதனால் சந்தேகம் அடைத்த மாணவியின் பெற்றார், தங்களது மாணவி அந்த ஆசிரியை லவ் ஜிகாத் செய்திருப்பதாக குற்றம் சாட்டினார்.

இந்த விவகாரம் தொடர்பாக அந்த பகுதியில் அரசியல் கட்சிகள் போராட்டமும் நடத்தியது. இந்த நிலையில், போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில், ஆசிரியை மற்றும் மாணவி உள்ளிட்டோர் இணைந்து கடந்த மூன்றாம் தேதி வீடியோ ஒன்றை வெளியிட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
அதில், "நாங்கள் தன்பாலின் ஈர்ப்பு உடையவர்கள் என்றும் இருவரும் பரஸ்பரம் சம்மதத்துடனே குடும்பத்தினருக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறியதாகவும், தங்களை நிம்மதியாக வாழ விட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து ராஜஸ்தானில் இருந்து தப்பிய ஆசிரியை மற்றும் மாணவி உள்ளிட்ட இருவரும் சென்னையில் இருப்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து ராஜஸ்தான் போலீசார் சென்னை போலீசார் உதவியுடன் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர்.
அதில், ஆசிரியை மற்றும் மாணவி இருவரும் ராஜஸ்தானில் இருந்து தப்பி கேரளாவுக்கு சென்றாதாகவும், பின்பு அங்கிருந்து சென்னை வந்த பிறகு போலீசாரிடம் பிடிபட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இருப்பினும் போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
English Summary
teacher run with school student in rajasthan