டெல்லி || மாணவனை சரமாரியாக தாக்கிய ஆசிரியர் - போலீசார் விசாரணை.!
teacher attack student in delhi
டெல்லி || மாணவனை சரமாரியாக தாக்கிய ஆசிரியர்.! போலீசார் விசாரணை.!
நாட்டின் தலைநகரான டெல்லியில் துக்மிர்பூர் பகுதியில் அரசுப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன், இந்தி பாடப்புத்தகத்தை பள்ளிக்கு கொண்டு வர மறந்துவிட்டான்.
இதனால், ஆத்திரமடைந்த ஆசிரியர், மாணவனை வெளியே செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், அந்தச் சிறுவனின் கழுத்தையும் அழுத்தியுள்ளார்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு சிறுவனின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. இதையடுத்து அந்தச் சிறுவன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக சிறுவனின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில், குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் சாதுல் ஹசன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பின்னர் போலீசார் அந்த ஆசிரியரை கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர். மேலும், இந்த தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
English Summary
teacher attack student in delhi